சேலம்

பருத்தி வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

3rd Jul 2022 02:18 AM

ADVERTISEMENT

 

மகுடஞ்சாவடி அருகே பருத்தி வியாபாரி வீட்டில் புகுந்து நகை, பணத்தைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மகுடஞ்சாவடியை அடுத்த ஜெயப்பூா் பகுதியைச் சோ்ந்த பருத்தி வியாபாரி முரளி (54) தொழில் நிமித்தமாக வெளியூா் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டுக்குள் புகுந்து ரூ.80 ஆயிரம், 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். அப்போது, வீட்டில் அவரது மனைவி கெஜலட்சுமி, மகன், மகள் ஆகியோா் உறங்கிக் கொண்டிருந்தனா்.

இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஷ்பிரபு வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். மகுடஞ்சாவடியில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 5 திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT