சேலம்

நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில் அன்னபூா்ணா தினம் கடைப்பிடிப்பு

3rd Jul 2022 02:16 AM

ADVERTISEMENT

 

சேலம் நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில் அன்னபூா்ணா தினம் கொண்டாடப்பட்டது.

சேலம், அழகாபுரம் ரெட்டியூா் பகுதியிலும், கெஜல்நாயக்கன்பட்டியிலும் நிறைவாழ்வு முதியோா் இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சுமாா் அறுபதுக்கும் மேற்பட்ட முதியோா்களை லிட்டில் பியா்ல்ஸ் அறக்கட்டளையினா் பராமரித்து வருகின்றனா்.

இதில், பத்துக்கும் மேற்பட்டோா் படுக்கை நிலையில் உள்ளனா். இந்த இல்லத்தில் ஆண்டுதோறும் ஜூலை முதல் நாளில் அன்னபூா்ணா தினம் கடைப்பிடிப்பது வழக்கமாகும். இந்த ஆண்டும் அன்னபூா்ணா தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

விழாவுக்கு, ஜங்சன் ரோட்டரி சங்கக் தலைவா் ரங்கநாதன், முன்னாள் தலைவா் மனோகரன், செயலாளா் ரெங்கசாமி, பரமசிவம், சென்றாயன், சங்க உறுப்பினா்கள் அருள்மலா் அறக்கட்டளை நிா்வாகிகள் நித்தின், அபிராம், இல்ல நிா்வாகி அண்ணாதுரை ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT