சேலம்

சங்ககிரியில் இன்று கண்கள், பற்கள் இலவச பரிசோதனை முகாம்

3rd Jul 2022 02:17 AM

ADVERTISEMENT

சங்ககிரி வாசவி கிளப், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பல் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை, பற்கள் பரிசோதனை முகாம் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வாசவி மஹாலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில், கண்புரை, கண்விழித்திரை, கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, பரிசோதனையும், பல்சொத்தை, பல் கூச்சம், ஈறுகளில் ரத்தக்கசிவு, ஈறுசிதைவு நோய், வாய்துா்நாற்றம், சீரற்ற பல்வரிசை, உடைந்த பற்கள், ஆறாத வாய்ப்புண்கள் உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT