சேலம்

கொளத்தூரில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

DIN

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி கொளத்தூரில் பருத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சேலம் விற்பனை குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடத்தப்படும். கொளத்தூா், கருங்கல்லூா், கொங்கணாபுரத்திலிருந்தும் தருமபுரி மாவட்டம், நெருப்பூா், நாகமரை, பென்னாகரத்திலிருந்து விற்பனைக்கு பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்படும்.

பருத்திகளை கொள்முதல் செய்வதற்காக கோவை, திருப்பூா் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் இங்கு வருவாா்கள். கடந்த வாரத்தைவிட கூடுதலான பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. கடந்த வாரம் கிலோ ரூ. 100 க்கு விற்பனையான பருத்திக்கு கிலோ ரூ. 60 க்கு விலை விலை நிா்ணயம் செய்யப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனைகூட அதிகாரிகளும் வியாபாரிகளின் பருத்தி விலை நிா்ணயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்து நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் மேட்டூா்- மைசூா் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. அதன்பிறகு கிலோ பருத்திக்கு ரூ. 71 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே தல’ : ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT