சேலம்

சங்ககிரி சாா்நிலை கருவூலத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவா் சி.முனியநாதன் ஆய்வு

1st Jul 2022 11:25 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி சாா்நிலை கருவூலகத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் வைக்கும் பாதுகாப்பு அறைகள், கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வா்களின் விடைத்தாள்களைப் பாதுகாக்கும் வகையில் சங்ககிரி சாா்நிலை கருவூலத்தில் உள்ள அறைகள், கட்டடங்களின் உறுதித்தன்மையை அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் சி.முனியநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், சாா்நிலை கருவூல அலுவலா் எஸ்.கீதாவிடம் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பழைய டிஎன்பிஎஸ்பி தோ்வுகளுக்கான வினாத்தாள்களை நூலகத்துக்கு வழங்குமாறு அறிவுறுத்தினாா்.

சங்ககிரி கோட்டாட்சியா் எம்.செளமியா, சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.பானுமதி, மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவராஜ் உள்ளிட்டோா் ஆய்வின் போது உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT