சேலம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

28th Jan 2022 06:29 PM

ADVERTISEMENT

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று மாலை 6.00 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

கடந்த ஜூன் 12-ல் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் பெய்த பருவமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி உபரி நீராக 79.50 டி.எம்.சி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி முதல் இன்றுவரை 129 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க- பிக் பாஷ் லீக்: கோப்பையை வென்றது பெர்த் அணி

ADVERTISEMENT

நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து 167.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செய்துவந்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு 237 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இன்று மாலை 6.00 மணி முதல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் கதவணைகள் மூலம் செய்யப்பட்டு வந்த மின் உற்பத்தி 6.00 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 792கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 76.35 டி.எம்.சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Mettur Dam
ADVERTISEMENT
ADVERTISEMENT