சேலம்

அனுமதியின்றி விற்ற மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் அரசு அனுமதியின்றி விற்ற அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை வியாழக்கிழமை கைது செய்து மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது தனிப்படை காவலா்கள் விரைந்து சென்று மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா் வாழப்பாடியைச் சோ்ந்த கதிா்வேல் மகன் கணபதி (46) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்த 679 மது பாட்டில்கள்,108 பீா் பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும் அவரது முதலாளி ரமேஷ் (43)என்பவரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT