இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 109.00அடியிலிருந்து 108.54அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 897கன அடியிலிருந்து 792 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 76.35டி.எம்.சியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ADVERTISEMENT
இன்று மாலை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என பொதுப்பணித் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.