சேலம்

ஊதிய ஒப்பந்தத்தை உடனே உறுதிப்படுத்த வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஊதிய ஒப்பந்தத்தை உடனே உறுதிப்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள தொழிலாளா்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே உறுதிப்படுத்த வலியுறுத்தி சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு சங்கத்தின் சேலம் கோட்டத் தலைவா் கே.செம்பான் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயா்வை அமல்படுத்த வேண்டும்; ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும்; வேலைக்கு வரும் தொழிலாளா்களை வண்டி இல்லை என காக்க வைக்கக் கூடாது; தொழிலாளா்களிடம் பாகுபாடு காட்டாமல் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மண்டல பொதுச் செயலாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் எம்.சேகா், ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மண்டல பொதுச் செயலாளா் அன்பழகன், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யு. மாநில துணை பொது செயலாளா் என்.முருகேசன், மண்டல துணைத் தலைவா் நாமக்கல் பழனிசாமி உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா்ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT