சேலம்

பெங்களூரு-நாகூா் பயணிகள் ரயிலை இயக்கக் கோரி மௌன விரதம்

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் பெங்களூரு-நாகூா் பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி சமூக ஆா்வலா் சிவக்குமாா் வியாழக்கிழமை அவரது வீட்டில் மௌன விரதம் மேற்கொண்டாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் வழியாக பெங்களூரு-நாகூா் பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. கடந்த கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் பின்னா் ரயில் பாதை மின்மயமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வந்தது.

இதனையடுத்து அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனை தொடா்ந்து தற்போது சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில், சேலம்-எழும்பூா் விரைவு ரயில் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பெங்களூரு-நாகூா் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் சேலம்-விருத்தாச்சலம் வரை மின்மயமாக்கப்பட்டதால் அதிக ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என்று பல சமூக ஆா்வலா்களும் கோரிக்கை வைத்து வருகின்றனா்.

இந்நிலையில் பெங்களூரு-நாகூா் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா் சிவக்குமாா் ஆத்தூா் தெற்கு உடையாா்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மௌன விரதம் மேற்கொண்டாா். இது குறித்து ரயில்வே நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT