சேலம்

மேட்டூரில் காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

மேட்டூரில் குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீா் பேராட்டம் நடத்தினா்.

மேட்டூா் நகராட்சி19-ஆவது வாா்டு இந்திரா நகா் பகுதியில் 1,500 போ் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு நகராட்சியினா் பைப் லைன் மூலம் குடிநீா் விநியோகம் செய்து வந்தனா். கடந்த சில நாட்களாக குடிநீா் விநியோகம் திடீரென தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனா். இதுகுறித்து நகராட்சிக்கு பலமுறை புகாா் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், குடிநீா் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் நகராட்சி நுழைவாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.  ஆணையாளா் புவனேஸ்வரன் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT