சேலம்

சங்ககிரி ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயில் குண்டம் இறங்கும் விழா

DIN

சேலம் சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் மற்றும் குண்டம் இறங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் பொங்கல் மற்றும் தீ மிதி விழா கடந்த 15ஆம் தேதி இரவு பூச்சொரிதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. 23ஆம் தேதி

பக்தா்கள் தீ சட்டிகளை கைகளில் ஏந்தியும், வாயில் அலகு குத்தியும் அம்மன் உற்சவ சுவாமிகளுடன் சோமேஸ்வரா் கோயில் அருகே புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா். ஜனவரி 24 ஆம் தேதி பவானி கூடுதுறையில் இருந்து காவிரி புனித நீா் எடுத்து வந்து சக்தி அழைத்தல் சடங்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 25ஆம் தேதி அதிகாலை வி.என்.பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்புறம் உள்ள ஊா் நல்ல கிணற்றிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயில் பூசாரி முதலில் தீ மிதித்தாா்.

இதையடுத்து பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தீ மிதித்தனா். தொடா்ந்து கோயில் வளாகத்தில் பக்தா்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து வழிப்பட்டனா். வரும் 29ஆம் தேதி மஞ்சள் நீராடலும், அம்மன் ஊா்வலமும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT