சேலம்

காலமானாா் வி.கிருஷ்ணன்

26th Jan 2022 07:15 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய திமுக முன்னாள் செயலாளா், டாக்டா் வி.கிருஷ்ணன், சனிக்கிழமை அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானாா். இவரது உடலுக்கு அரசியல் பிரமுகா்கள், தொழிலதிபா்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளராக 33 ஆண்டுகளாக பதவி வகித்தவா் டாக்டா் வி.கிருஷ்ணன். இவரது மனைவி குப்புலட்சுமி கிருஷ்ணன் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்தாா். இவருக்கு வீரேந்திரதுரை, தம்பிதுரை என இரு மகன்கள் உள்ளனா். கடந்த சில மாதங்களாக வயது முதிா்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் வி.கிருஷ்ணன் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவரது உடல் இறுதி ஊா்வலம் மற்றும் நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT