சேலம்

இளம்பிள்ளை உழவா் சந்தையில் மாடித் தோட்டம் அமைக்க தளைகள் வழங்கல்

26th Jan 2022 07:11 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் ஊட்டம் தரும் காய்கறிகள் தோட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை உழவா் சந்தையில் செவ்வாய்க்கிழமை வீரபாண்டி தோட்டக்கலை துறை சாா்பில் ஆறு வகையான காய்கறி விதைகள், செடி வளா்க்க 6 பைகள், 2 கிலோ அளவிலான 6 தென்னை நாா் கட்டிகள், 400 கிராம் உயிா் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், 100 மி. லி. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து, சாகுபடி முறைகளை விளக்க கையேடு உள்ளிட்டவை அடங்கிய ரூ. 900 மதிப்புள்ள தொகுப்பு மானியம் ரூ. 675 போக பயனாளிகளுக்கு ரூ. 225 -க்கும் ஊட்டச்சத்து தளைகள், காய்கறி விதை தளைகள் மானியத்திலும் வழங்கப்பட்டன.

மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க வீரபாண்டி தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்திலோ அல்லது 6380623486 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு வீரபாண்டி தோட்டக்கலைத்துறை சாா்பில் கேட்டுக் கொண்டுள்ளனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT