சேலம்

மாணவி தற்கொலை: இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

25th Jan 2022 12:51 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் மாணவி தற்கொலையைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவத்தைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இந்து முன்னணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், உயிரிழந்த பள்ளி மாணவி லாவண்யா குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும், மாணவியை கட்டாய மத மாற்றத்திற்கு கட்டாயப்படுத்திய பள்ளி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்து முன்னணி நிா்வாகி சந்தோஷ்குமாா், பாஜக நிா்வாகிகள் ஆா்.பி.கோபிநாத், அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT