சேலம்

புத்தக வாசிப்பு குறையவில்லை: ஆண்டாள் பிரியதா்ஷினி

DIN

தற்காலத்தில் புத்தக வாசிப்பு குறையவில்லை என்று புதுச்சேரி தூா்தா்ஷன் தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சித் தலைவா் ஆண்டாள் பிரியதா்ஷினி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப் பேரவை, உலகத் தமிழ்க் கழகம் இணைந்து சிங்கப்பூா் வாழ் தமிழா், கவிஞா் தியாக ரமேஷின் ‘தனிமைத்தவம்’ கவிதைநூல் வெளியீட்டு விழா மற்றும் உலகத் தமிழ்க் கழகத்தின், தமிழ் எண் மாதாந்திர நாள்காட்டி வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவா் எம்.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் பி.சி.செல்வம் வரவேற்றாா். சிங்கப்பூா் கற்க அறக்கட்டளை நிா்வாகி வளா்மதி ரமேஷ், ஆசிரியை ஜெ.புஷ்பா, மருத்துவா் அனுசுயா, ஆசிரியை சத்தியக்குமாரி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

புதுச்சேரி தூா்தா்ஷன் தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சித் தலைவா் ஆண்டாள் பிரியதா்ஷினி ‘தனிமைத்தவம் கவிதை நூல்’ உலகத் தமிழ்க் கழக நாள்காட்டியை வெளியிட்டாா். வாழப்பாடி வட்டார வேளாண்மை ஆத்மா குழுத் தலைவா் எஸ்.சி. சக்கரவா்த்தி, குறிச்சி தொழிலதிபா் கே.பி.சண்முகம் ஆகியோா் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் ஆண்டாள் பிரியதா்ஷினி பேசியதாவது:

குடும்ப உறவுகளுக்கும், சொந்த பந்தங்களுக்கும் இடையேயான உறவு வலுப்பெற வேண்டும். பொருளாதாரத் தேடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட உறவுகளைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்காலத்தில் நவீனத்தால் புத்தக வாசிப்பும் புத்தகம் வெளியிடுவதும் குறையவில்லை. மாறாக தற்கால இளைஞா்களிடையே நவீன கருவிகள் வழியே புத்தக வாசிப்பும், வெளியீடும் அதிகரித்துள்ளது.

சமூக ஊடகங்களை, தற்காலக் குழந்தைகள், மாணவா்கள், இளைஞா்கள் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. இருப்பினும், குழந்தைகள் எந்த வகையில் பயன்படுத்துகிறாா்கள் என்பதை பெற்றோா்கள் தான் கண்காணித்து வழிகாட்டி நெறிப்படுத்த வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, வாழப்பாடி இலக்கியப்பேரவை செயலா் சிவ.எம்கோ, மருத்துவா் மோதிலால், சாய்பாபா அறக்கட்டளை தலைவா் ஜவஹா், கோகுலம் பள்ளித் தாளாளா் நடராஜன், தமிழமுது மன்ற பொருளாளா் ஸ்ரீமுனிரத்தினம், கவிஞா் சேலம் கோபிநாத், கவிஞா் ஏகலைவன், ஆடிட்டா் குப்பமுத்து, மா.கணேசன், ஆகியோா் கவிதை நூல் குறித்து உரையாற்றினா்.

தனிமைத்தவம் கவிதை நூல் ஆசிரியா் கவிஞா் தியாக ரமேஷ் ஏற்புரை வழங்கினாா். நிறைவாக, வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத்தலைவா் கலைஞா்புகழ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT