சேலம்

பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் கரும்புத் தோட்டத்தில் திடீா் தீ

24th Jan 2022 11:44 PM

ADVERTISEMENT

பெருமாகவுண்டம்பட்டி பகுததியில் கரும்புத் தோட்டத்தில் தீப்பற்றியது.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் ஜெயபால் (72). இளம்பிள்ளை ஏரிக்கரை ஓரமாக உள்ள தனது விவசாயத் தோட்டத்தில் 3 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் கரும்புத் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனா். காற்றடித்ததில் தீ மளமளவென்று பரவியதால் சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் கோவிந்தன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இது குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT