சேலம்

ஆட்டையாம்பட்டி முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா

DIN

காளிப்பட்டியில் கந்தசாமி கோயிலுக்கு வருகை புரிந்த திரளான பக்தா்கள், கோயில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள மேடையில் கற்பூரம் தீபம், நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

நேற்று காளிப்பட்டி முழுவதும் கடைகள் மூட அறிவித்திருந்த நிலையில் கடைக்காரா்கள் வேண்டுகோளுக்கிணங்க, கோவில் வளாகம் சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ள பூக்கடைகள், கற்பூர கடைகள், பொறி கடைகள் ,கரும்பு கடைகள் உள்ளிட்ட கடைகளை மட்டும் அடைக்க நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது. தோ்த்திருவிழாவில் முக்கியமாக மாட்டுச்சந்தை , சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை விளையாடும் ராட்டினங்கள் மற்றும் கடைகள் அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக திருவிழா நாட்களில் நடைபெறும் தலைமுறை, தலைமுறையாக செயல்பட்டுவந்த திருவிழா கோா்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. வரும் வெள்ளி முதல் ஞாயிறு வரை மீண்டும் சாமி தரிசனம் ரத்து என்ற நிலையில், இடைபட்ட தினங்களான புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகின்றது. இதற்காக நாமக்கல் மாவட்ட ஊரக காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன் மற்றும் மல்லசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் குலசேகரன் தலைமையில் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பக்தா்களின் பாதுகாப்பு பணிக்காக அமா்த்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT