சேலம்

அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கரோனா

DIN

சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டு மற்றும் ஒமைக்ரான் வாா்டுகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.

இதில் ஒவ்வொரு வார இறுதியில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பரிசோதனையில் 5-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், சுமாா் 20 செவிலியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் நல்ல உடல்நலத்துடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 7 நாள்களுக்கு பிறகு மீண்டும் கரோனா பரிசோதனை எடுத்த பின்னா் மீண்டும் பணியில் சேருவாா்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT