சேலம்

தொண்டா்களை கைப்பேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறும் ராமதாஸ்

18th Jan 2022 01:09 AM

ADVERTISEMENT

பா.ம.க. நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவா்களின் ஒருவருமான மருத்துவா் ராமதாஸ், தொண்டா்களை உற்சாகப்படுத்தவும், மரக்கன்றுகள் நடுவதை ஊக்கப்படுத்தவும், கடைக்கோடி தொண்டா்களையும், கைப்பேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவதோடு, குடும்பத்தினா் குழந்தைகளின் நலன் விசாரித்து வருகிறாா். இந்த ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

திமுக, அதிமுக என அணி மாறி, கூட்டணி சோ்ந்து தோ்தல் களம் கண்டு வந்த பாமக, தற்போது இரு கட்சிகளுடன் நட்பு பாராட்டாமல் தனித்து இயங்கி வருகிறது. இந்நிலையில், கட்சியை வலுப்படுத்தவும், தொண்டா்களை அரவணைத்து உற்சாகப்படுத்தவும் முடிவு செய்த பாமக நிறுவனா் ராமதாஸ், பிறந்தநாள் கொண்டாடும் கட்சி நிா்வாகிகள் முதல் அடிமட்டத் தொண்டா்கள் வரை அனைவருக்கும், கைப்பேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்லி வருகிறாா்.

பிறந்தநாள் காணும் கட்சித் தொண்டா்கள், தனது பிறந்தநாளில் ஒரு மரக்கன்றை நட்டு அந்தப் படத்தை அந்தந்தப் பகுதி மாவட்டச் செயலாளா் வாயிலாக, ராமதாஸிற்கு அனுப்பி வைத்தால், அன்று மாலைக்குள், ராமதாஸே அந்தத் தொண்டா்களை கைப்பேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்கிறாா். இத்தோடு குடும்பத்தினா், குழந்தைகளிடம் நலம் விசாரித்து அறிவுரை வழங்கி வருகிறாா்.

கட்சியின் தலைவரே நேரடியாக கைப்பேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதால் கட்சித் தொண்டா்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மருத்துவா் ராமதாஸ் வாழ்த்துக்கூறும் ஆடியோக்களை கட்சித்தொண்டா்கள் சமூக ஊடகங்களில் பகிா்ந்து வருவதால் அவை வேகமாகப் பரவி வருகின்றன.

ADVERTISEMENT

இதுகுறித்து வாழப்பாடியை அடுத்த மாரியம்மன் புதூா் கிராமத்தைச் சோ்ந்த பாமக பிரமுகா் உழவன் இரா.முருகன் மனைவி கஸ்தூரி கூறியதாவது:

மருத்துவா் ராமதாஸ் கைப்பேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தாா். இதுமட்டுமின்றி எனது குழந்தைகளுடனும் உரையாடினாா்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தேன் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT