சேலம்

சேலம் எஸ்.பி.க்கு கரோனா தொற்று

18th Jan 2022 12:52 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். ஸ்ரீ.அபினவ் கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபினவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா். மேலும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலுள்ள போலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT