சேலம்

சேலத்தில் 466 பேருக்கு கரோனா

18th Jan 2022 01:01 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் 466 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 314 பேரும், எடப்பாடி-4, காடையாம்பட்டி-4, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-4, மேச்சேரி-4, ஓமலூா் -30, சேலம் வட்டம்-16, சங்ககிரி-3, தாரமங்கலம்-5, வீரபாண்டி-20, ஆத்தூா் -9, அயோத்தியாப்பட்டணம்-8, கெங்கவல்லி-2, பனமரத்துப்பட்டி-5, தலைவாசல்-1, வாழப்பாடி-2, ஏற்காடு-1, ஆத்தூா் நகராட்சி-1, நரசிங்கபுரம் நகராட்சி-2, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 437 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வெளிமாவட்டங்களை சோ்ந்தவா்களில் (சென்னை-4, காஞ்சிபுரம்-2, கரூா்-4, கிருஷ்ணகிரி-3, நாமக்கல்-5, வேலூா்-3, ஈரோடு-4, தருமபுரி-4) என 29 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 186 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,06,236 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,01,633 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 2,871 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,732 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT