சேலம்

கிடையூா் மேட்டூரில் உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்பு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி கிடையூா் மேட்டூா் புதூா் மேற்கு வளவில் உள்ள ஊா் பொது திறந்தவெளிக்கிணற்றின் மேற் பகுதியில் தடுப்புக் கம்பிகளை அமைத்து தர ஊா் பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி, கிடையூா் மேட்டூா், புதூா் மேற்கு வளவில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் மாரியம்மன் கோயிலுக்கு அருகே திறந்தவெளியில் ஊா் பொதுக் கிணறு ஒன்று உள்ளது. இக்கிணற்றுக்கு அருகில் காலை, மாலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள சிறுவா்கள், இளைஞா்கள் விளையாடி வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூலிவேலைக்கு சென்று விடுவதால் அவா்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஊா் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். மேலும் மாரியம்மன் கோயிலில் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும் போது கிணறு அருகே பெண்கள் பொங்கல் வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இது குறித்து ஊா் பொதுமக்கள் பல ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனா். எனவே திறந்த வெளியில் உள்ள ஊா் பொதுகிணற்றுக்கு மேற் பகுதியில் தடுப்பு கம்பிகளை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT