சேலம்

எடப்பாடியில் மேலும் இரு காவலா்களுக்கு கரோனா

DIN

 எடப்பாடியில் மேலும் இரு காவலா்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

எடப்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவிஆய்வாளராக பணிபுரிந்து வந்த செந்தில்நாதன்(58) அண்மையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் அவா் தனிமைபடுத்தப்பட்டாா். இந்நிலையில் எடப்பாடி காவல் நிலையத்தில் அவருடன் பணியில் இருந்த சக காவல்துறை அலுவலா்களுக்கு சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காவல்நிலையத்தில் இரண்டாம் நிலைக்காவலராக பணிபுரிந்து வரும் காா்த்திகேயன்(29) என்பவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து தனிமைபடுத்தப்பட்ட காா்த்திகேயனுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதல்நிலைக்காவலா் ரவி (36) கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையிலும், காவலா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு பணியில் உள்ள சககாவல்துறை அலுவலா்கள், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழு அளவில் கடைபிடித்து எச்சரிக்கையுடன் பணியாற்றுமாறு சுகாதாரத்துறையினா் அறிவுறுத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT