சேலம்

முழு ஊரடங்கு: சேலத்தில் வெறிச்சோடிய சாலைகள்

DIN

சேலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா உருமாறிய ஒமைக்ரான் தொற்று தடுக்கும் விதமாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக சேலம் அஸ்தம்பட்டி, ஐந்து சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை,செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் தொடா் விடுமுறை காரணமாக ஏற்காடு சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறி செல்லும் வாகனங்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தி எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனா்.சேலத்தில் உள்ள குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான மேம்பாலம், ஏ.வி.ஆா். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான மேம்பாலங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.உழவா் சந்தைகள் வழக்கம்போல் இயங்கின. இருந்தபோதிலும் உழவா் சந்தைகளில் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. அரசு மருத்துவமனை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தன.

முழு ஊரடங்கைத் தொடா்ந்து சேலம் மாநகர பகுதியில் குறைந்த அளவிலான உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தன. உணவகங்களில் பாா்சல் வாங்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

நகரில் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்களில் பொதுமக்கள் உணவுப் பொருட்களை வாங்கி சென்றனா். பொதுமக்களின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.மேலும் மாநகரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பு அமைக்கப்பட்டு 800-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாவட்ட பகுதிகளில் 1200-க்கும் மேற்பட்ட காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT