சேலம்

இடையப்பட்டியில் இளைஞா்கள் மீது தாக்குதல்: சாலை மறியல்

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இளைஞா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை, தீண்டாமை வன்கொடுமை பாதுகாத்து சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி, அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி வில்லவனூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா், இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை இடையப்பட்டி வழியாக தும்பல் நோக்கி சென்றுள்ளனா். அப்போது இந்த இளைஞா்கள் சப்தமிட்டதாகக் கூறி, இடையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வில்வனூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கும், இடையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த வில்வனூா் கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் (32), சபரி (34), பெருமாள் (40), கபிலமுத்து (24), மணி (28), பிரபு (31) ஆகிய 6 போ், ஆத்துாா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவா்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி, தாக்கப்பட்ட இளைஞா்களின் உறவினா்கள் வில்வனூா் வனத்துறை சோதனைச்சாவடி அருகே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதல் நடத்தியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுகப்படுமென போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இருப்பினும்,வில்லவனூா் மற்றும் இடையப்பட்டி கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT