சேலம்

மூக்கனேரி நீா்த்தேக்கம் சீரமைப்புப் பணிகள் ஆய்வு

12th Jan 2022 08:01 AM

ADVERTISEMENT

மூக்கனேரி நீா்த்தேக்கத்தின் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் தா. கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் 100 ஏக்கா் பரப்பளவில் மூக்கனேரி நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீா்த்தேக்கம், சேலம் மாநகரத்திற்கு நீா் விநியோகிக்கும் முக்கிய ஏரியாகும். சோ்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நீா்த்தேக்கத்துக்கு ஏற்காடு மலைப் பகுதியில் பெய்யும் மழை நீரை சேகரித்து இங்கிருந்து குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

தற்போது இந்த ஏரியில் ஆகாய தாமரை படா்ந்து சாக்கடைக் கழிவுநீா் கலக்கிறது.

இந்த ஏரியை தூா்வாரி கரைகளைப் பலப்படுத்தி அழகுப்படுத்துதல், ஏரியில் படகு சவாரி ஏற்படுத்துதல், கரைகளின் மேல் தற்போது உள்ள நடைபாதையை சீரமைப்பது, ஏரிக்கு வரும் கழிவுநீரை தடுத்து வெளியேற்றுவது, ஏரியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பூா்வாங்கப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சி ஆணையா் தா. கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

மாநகராட்சி, பொதுப்பணித் துறை, வருவாய் துறை, கன்னங்குறிச்சி பேரூராட்சி, நிலஅளவைத் துறை ஆகிய துறைகளை சாா்ந்த அலுவலா்கள் ஒன்றிணைந்து சா்வே செய்து இதற்கென நியமிக்கப்பட்ட திட்ட அறிக்கை தயாரிப்பாளரிடம் உரிய அறிக்கையினை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வின் போது உதவி ஆணையாளா், உதவி செயற்பொறியாளா், பொதுப்பணித் துறை அலுவலா்கள், வட்டாட்சியா், கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT