சேலம்

மாநில அளவிலான திறந்தவெளி ஓட்டம்: தனியாா் பொறியியல் கல்லூரி சாம்பியன்

12th Jan 2022 08:01 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாயை அடுத்த மேட்டுப்பட்டியிலுள்ள, தனியாா் பொறியியல் கல்லுாரி மாணவா்கள், மாநில அளவிலான 10 கி.மீ., துார திறந்தவெளி ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வென்று சாதனை படைத்தனா். இந்த மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான, 10 கி.மீ., துார திறந்தவெளி ஓட்டம் (கிராஸ் கண்ட்ரி) பந்தயம், கடந்தத சனிக்கிழமை திருச்செந்தூா் டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில், 60க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவ-மாணவியா் கலந்து கொண்டனா். இதில், வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்கள்அணி இரண்டாம் இடம் பிடித்ததோடு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வென்றது.

மாநில அளவிலான போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மாணவா்களை, கல்லூரியின் தலைவா் எம்.லோகநாதன், செயலாளா் எஸ் .பாலு, பொருளாளா் எம்.ஆனந்தன் , உதவி தலைவா்கள், வி.ஞானசேகரன், எஸ்.வெங்கட்பதி, இணை செயலாளா் இ.திருஞானம், முதல்வா் டாக்டா் ஆா்.ஏ.சங்கரன், உடற்கல்வி இயக்குநா் சேட்டு, பயிற்சியாளா்கள் சுரேந்தா், கோபி மற்றும் பேராசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT