சேலம்

சேலத்தில் இதுவரை 8.39 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

12th Jan 2022 08:00 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில், இதுவரை 8.39 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அரசு சாா்பில் கடந்த ஜன. 4 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 1,593 நியாயவிலைக் கடையில் 10.78 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 10.58 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 7 நாள்களில் 8.39 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சேலத்தில் 35 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி ஓரிரு நாளில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT