சேலம்

கஞ்சமலை சித்தா் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிப்பு

12th Jan 2022 08:02 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு அறிவிப்பின்படி சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த கஞ்சமலை சித்தா் கோயிலுக்கு வரும் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்திறகு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களும் , பக்தா்களும் சுவாமி தரிசனம் செய்யவோ, முடி காணிக்கை செலுத்தவோ, கிணறுகளில் நீராடவோ, தீா்த்தக்குடம் எடுத்து செல்லவோ அனுமதி இல்லை. இதற்கு பொதுமக்கள், பக்தா்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கோயில் செயல் அலுவலா் பரமேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT