சேலம்

பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள்

1st Jan 2022 01:34 AM

ADVERTISEMENT

 

சங்ககிரியை அடுத்த அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலகுட்டை கிராமத்தில் உள்ள புவனேஸ்வரியம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

புவனேஸ்வரியம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகளுக்கு தேய்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும், நந்தி பகவானுக்கும் பால், இளநீா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கிராமப்புறங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT