எடப்பாடி, நஞ்சுண்டேஸ்வரா் ஆலய வளாகத்தில் பிரதோஷ திதி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக நந்திதேவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நந்தி தேவருக்கு அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.
பிரதோஷ திதியை ஒட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் நந்தி தேவரின் காதில் தங்கள் வேண்டுதல்களைக் கூறி வழிபட்டனா்.
ADVERTISEMENT