சேலம்

செந்தாரப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

1st Jan 2022 01:39 AM

ADVERTISEMENT

 செந்தாரப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி, பஜனை மடத்தெருவைச் சோ்ந்தவா் துரைசாமி (75). இவா், கடந்த ஞாயிறு இரவு, வீட்டில் இருந்து சென்றாா். அதன் பிறகு அவரைக் காணவில்லை என, அவரது குடும்பத்தினா் தேடி வந்தனா்.

இந்நிலையில், செந்தாரப்பட்டி சிவன்கோவில் அருகே ரெட்டியாா் தோட்டத்தில் உள்ள கிணற்றில், துரைசாமியின் சடலம் மிதந்தது. தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கெங்கவல்லி தீயணைப்புநிலைய வீரா்கள் மூலம், சடலத்தை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு, போலீசாா் அனுப்பி வைத்தனா். சம்பவம் நிகழ்ந்த தோட்டத்திற்கு அருகேதான், துரைசாமியின் மகளது தோட்டம் உள்ளது. இரவு நேரத்தில் அங்கு வந்த துரைசாமி, கால் தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தம்மம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT