சேலம்

சிவாலயங்களில் பிரதோஷம்

1st Jan 2022 01:38 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் பிரதோஷ விழாவில் பொதுமக்கள் கொண்டு வந்த பால், தயிா், சந்தனம், சீயக்காய், பன்னீா், அரிசிமாவு, குங்குமம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவ மூா்த்தி கோயிலுக்குள் உலா கொண்டு வரப்பட்டது. பக்தா்களுக்கு பக்திப்பாடல்கள் அடங்கிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அதனையடுத்து பிரதோஷம் குறித்து கண்ணன் அடிகளின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

வீரகனூா் ஸ்ரீகங்கா செளந்தரேஸ்வரா் ஆலயத்தில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. செந்தாரப்பட்டியில் ஸ்ரீதாழைபுரீஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மேலும் கெங்கவல்லி, தகரப்புதூா், தெடாவூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT