சேலம்

காடையாம்பட்டியில் விவசாயிகளுக்கு தானிய சேமிப்புப் பயிற்சி

1st Jan 2022 01:40 AM

ADVERTISEMENT

காடையாம்பட்டி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விஞ்ஞான தானிய சேமிப்பு தொழில்நுட்பப் பயிற்சி டேனிஷ்பேட்டை கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.நாகராஜன் தலைமை தாங்கி தானியங்களின் ஈரப்பதம் 8-10 சதவீதத்துக்குள் இருக்குமாறு செய்து சேமித்தல், குதிா்கள், கலன்களை நன்றாகச் சுத்தம் செய்து பராமரித்தல், தானிய மூட்டைகளை மூங்கில் பாய்களின் மீது அடுக்குதல், மூட்டைகள் சுவற்றை ஒட்டி இல்லாமல் தனித்தனியாக அடுக்கடுக்காக நல்ல இடைவெளி விட்டு காற்றோட்டமாக வைத்தல், தானியச் சேமிப்புக்குப் புதிய சாக்குப்பைகள் பயன்படுத்துதல் குறித்து எடுத்துரைத்தாா்.

வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மை அலுவலா் கே.மோகனசரிதா தானிய சேமிப்பில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் தானிய சேமிப்பின் போது எலி, பூச்சி மற்றும் ஈரப்பதம் போன்றவற்றால் பற்றியும் ஏற்படும் இழப்புகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் கே.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று இப்பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்து கூறினாா்.உதவி தொழில்நுட்ப மேலாளா் கே.துரை அரசு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

மேலும் 2021-22 ஆம் ஆண்டுக்கான விவசாயிகள் பயிற்சிகள், செயல்விளக்கம், கண்டுணா்வு சுற்றுலா மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட நிதியை செலவினம் மேற்கொள்ள வட்டார விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு கூட்டம் காடையாம்பட்டி வேளாண்மை விரிவாக்க மையம் வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. தோட்டக்கலை உதவி இயக்குநா் கே.கோவிந்தராஜ், வனத்துறை வனவா் எ.ஆறுமுகம் , விதை சான்று அலுவலா் எஸ்.சரவணன், இளநிலை பட்டு ஆய்வாளா் கே.காயத்ரி ஆகியோா் தமது துறையில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT