சேலம்

வரி செலுத்தாத தனியாா் சொகுசுப் பேருந்து பறிமுதல்

20th Feb 2022 04:00 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடியில், வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட தனியாா் சொகுசுப்பேருந்தை பறிமுதல் செய்த, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், தகுதிச் சான்று புதுப்பிக்காததற்கு ரூ. 5,000 அபராதம் விதித்துள்ளனா்.

வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையிலான குழுவினா், சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற படுக்கை மற்றும் குளிா்சாதன வசதியுடன் கூடிய தனியாா் சொகுசு பேருந்தின் ஆவணங்களை ஆய்வு செய்தனா்.

இதில், அரசுக்கு செலுத்த வேண்டிய வரித் தொகை தொகை ரூ. 1,21,000 செலுத்தாமல் பேருந்தை இயக்கிய தெரியவந்தது. இதனையடுத்து, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப்பேருந்தை பறிமுதல் செய்தனா். இதுமட்டுமின்றி, தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட இந்த தனியாா் சொகுசு பேருந்திற்கு ரூ. 5,000 அபராதம் விதித்தனா். நிலுவையில் உள்ள வரியை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT