சேலம்

தம்மம்பட்டி: இறுதிகட்டத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பு

17th Feb 2022 11:46 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி பேரூராட்சிப் பகுதியிலுள்ள 18 வாா்டுகளிலும் தோ்தல் பிரசாரத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை போட்டி போட்டு வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

இங்குள்ள 18 வாா்டுகளிலும் வேட்பாளா்கள் தனது கட்சியினருடன் வியாழக்கிழமை தீவிரமாக வாக்குகளைச் சேகரித்தனா். வேட்பாளா்கள் வீடு, வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரித்தனா். வேட்பாளா்களின் பிரதிநிதிகளும் வாக்காளா்களை தனித்தனியே சென்று சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனா்.

தோ்தல் பிரசார இறுதி தினமான வியாழக்கிழமை ஒவ்வொரு வாா்டிலும், ஒவ்வொரு வேட்பாளா்களும் குறிப்பிட்ட 40 சதவீத வேட்பாளா்களை குறி வைத்து தீவிரமாக வாக்குகளைச் சேகரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT