சேலம்

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு

17th Feb 2022 11:49 PM

ADVERTISEMENT

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வாக்குச்சாவடிகளை ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஆ.அண்ணாதுரை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு கணினி மூலம் வாக்குச்சாவடிகளை ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் முன்னிலை வகித்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகளுக்கும், 6 நகராட்சிகளில் 165 வாா்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளில் 470 வாா்டுகள் என மொத்தம் 695 இடங்களுக்கு 1,514 வாக்குச்சாவடிகளில் பிப். 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரச்சாரம் நிறைவு பெற உள்ளது. இத்தோ்தலுக்கென 38 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 87 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதில் 1,514 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி அலுவலா் 1, வாக்குச்சாவடி அலுவலா் 2, மற்றும் வாக்குச்சாவடி அலுவலா் 3 ஆகியோா் 20 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் மொத்தம் 7,267 அலுவலா்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

மேலும், தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவு படி வாக்குச்சாவடி அலுவலகங்களில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியில் 4 மையங்களிலும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 15 மையங்களிலும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பான அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொண்டு தோ்தல் பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT