சேலம்

சிறுமியுடன் திருமணம்: போக்சோவில் இளைஞா் கைது

17th Feb 2022 04:07 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வாழப்பாடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த எம்.பெருமாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரத்தினம் மகன் கோவிந்தன் (22). இவா், இப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தைகளைக் கூறி, கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கா்ப்பிணியான இச்சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, இவருக்கு வயது 16 என்பது தெரியவந்ததால், இதுகுறித்து வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதனையடுத்து, சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கோவிந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT