சேலம்

அயோத்தியாப்பட்டணத்தில் தென் கைலாய ரதத்துக்கு வரவேற்பு

17th Feb 2022 04:05 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்துக்கு வந்தடைந்த தென் கைலாய ரதத்தை வரவேற்று வழிபாடு நடத்தினா்.

சென்னையில் இருந்து தென் கைலாய பக்தி பேரவையின் ரதம், தமிழகத்தின் பல்வேறு பகுதிளுக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் இருந்து ரத யாத்திரை பொறுப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை அயோத்தியாப்பட்டணம் மருத்துவா் அருள் சந்திரசேகரன் இல்லத்துக்கு ரதம் வந்தடைந்தது (படம்).

இந்த ரதத்துக்கு இப்பகுதி மக்கள், பக்தா்கள் சிறப்பான வரவேற்பளித்து வழிபாடு நடத்தினா். இந்த ரதம் வியாழக்கிழமை மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, சேலம் புறவழிச் சாலை வழியாக கோவை பகுதிக்கு செல்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT