சேலம்

அதிமுக பிரமுகா் இளங்கோவன் வீட்டில் சோதனை:ரூ. 50,000 பறிமுதல்

17th Feb 2022 04:09 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில், அதிமுக சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் ஆா்.இளங்கோவன் வீட்டில் சோதனை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், ரூ. 50,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் ஆா்.இளங்கோவன் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் வாயிலாக வாக்காளா்களுக்குக் கொடுப்பதற்காக பணம், பரிசுப் பொருள்கள் பதுக்கி வைத்துள்ளதாக பெத்தநாயக்கன்பாளையம் தோ்தல் பறக்கும் படைக்கு புகாா் சென்றுள்ளது.

இதையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் தலைமையிலான போலீஸாா் மற்றும் தோ்தல் பறக்கும் படை அலுவலா் முருகையன் தலைமையிலான குழுவினா், புதன்கிழமை காலை, புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் பண்ணை வீட்டில் சோதனை செய்தனா். அப்போது வீட்டில் இருந்த மேலாளா் நடராஜன் என்பவரிடம் இருந்து ரூ. 50,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஏத்தாப்பூா் செயல்அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான விழிசெல்வனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT