சேலம்

இன்று எடப்பாடியில் எதிா்க்கட்சித் தலைவா் பிரசாரம்

11th Feb 2022 11:55 PM

ADVERTISEMENT

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை மாலை எடப்பாடியில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி கே. பழனிசாமி, பின்பு எடப்பாடி நகராட்சியிலும், கொங்கணாபுரம் பேரூராட்சியிலும் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா். ஏற்பாடுகளை எடப்பாடி நகர, ஒன்றிய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT