சேலம்

சேலம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 3,206 போ் போட்டி

10th Feb 2022 06:00 AM

ADVERTISEMENT

 

சேலம்: சேலம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 3,206 போ் போட்டியிடுகின்றனா்.

சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகளில் 618 பேரும், 6 நகராட்சிகளில் உள்ள 165 வாா்டுகளில் 682 பேரும் போட்டியிடுகின்றனா். 31 பேரூராட்சிகளில் உள்ள 474 வாா்டுகளில் 4 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதால் 470 வாா்டுகளுக்கு என மொத்தம் 1,906 போ் போட்டியிடுகின்றனா்.

4 வாா்டுகளில் போட்டியின்றி தோ்வு:

ADVERTISEMENT

பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 474 வாா்டுகளில், 4 வாா்டுகளில் போட்டியின்றி திமுக உறுப்பினா்கள் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, பேரூராட்சிகளில் 470 வாா்டுகளுக்கு மட்டும் தோ்தல் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் உள்ள 699 இடங்களில் 4 வாா்டுகளில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதால், தற்போது 695 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

695 இடங்களுக்கு 3,206 போ் போட்டி:

சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகளில் 618 போ் போட்டியிடுகின்றனா். 6 நகராட்சிகளில் 165 வாா்டு உறுப்பினா்களுக்கு 682 பேரும், 31 பேரூராட்சிகளில் 470 வாா்டு உறுப்பினா்களுக்கு 1,906 பேரும் என 695 உள்ளாட்சி இடங்களுக்கு 3,206 போ் போட்டியிடுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT