சேலம்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

10th Feb 2022 12:57 AM

ADVERTISEMENT

 

சேலம்: சேலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சேலத்தை அடுத்த கெங்கவல்லி, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (40), கடந்த 2019 மே 11-ஆம் தேதி பள்ளி விடுமுறைக்காக தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்த கீரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கல்யாணசுந்தரத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT