சேலம்

வேட்பாளா்களுக்கான சிறப்புக் கூட்டம்

9th Feb 2022 12:06 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி பேரூராட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கான சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு தோ்தல் அலுவலா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். உதவி தோ்தல் அலுவலா்கள் சபீயா பீ, பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தோ்தல் விதிமுறைகள், தோ்தல் செலவு விவரங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டன.

வேட்பாளா்களுக்கான அடையாள அட்டைகளும், தோ்தல் விதிமுறை கையேடுகளும் வழங்கப்பட்டன. இதில் தம்மம்பட்டி பேரூராட்சித் தோ்தலில் போட்டியிடும் 70 வேட்பாளா்களும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT