சேலம்

32 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

9th Feb 2022 12:08 AM

ADVERTISEMENT

சேலத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ வெள்ளி கொலுசுகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, கந்தம்பட்டி அருகே தோ்தல் பறக்கும்படை அலுவலா் அறிவுடைநம்பி தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பனங்காடு பகுதியைச் சோ்ந்த முனியப்பன் என்பவரின் இருசக்கர வாகனத்தை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்ததில், ரூ. 22 லட்சம் மதிப்புள்ள 32 கிலோ வெள்ளி கொலுசுகள் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டு சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT