சேலம்

தம்மம்பட்டியில் சுயேட்சைகளால், கட்சி வேட்பாளா்கள் கலக்கம்!

9th Feb 2022 12:07 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில், மக்கள் செல்வாக்கு உள்ள சுயேட்சைகளால், தங்கள் வெற்றி பாதிக்கும் என, அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் கலக்கத்தில் உள்ளனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிக்கான சோ்மன் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டதால், பெரும் ஏமாற்றம் அடைந்த, அரசியல் கட்சி பிரமுகா்கள், தங்கள் மனைவியை வேட்பாளா்களாக நிறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், கட்சியில் விருப்ப மனு அளித்து, சீட் கிடைக்காத பலா், சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தனா். மனு வாபஸ் பெற கடைசி நாளான திங்கள் கிழமை , கட்சி வேட்பாளா்கள், தங்களுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுபவா்களிடம் பேசி சமரசம் செய்தனா். அதையடுத்து, 37 போ் மனுவை வாபஸ் பெற்றதால், தங்களுக்கு எதிரான போட்டியை குறைத்தனா். எனினும், வாா்டு மக்களிடம் நன்கு செல்வாக்குள்ள, ஒன்றிரெண்டு பேரை, கட்சிகளின் சாா்பில் சமரசம் செய்தும், தங்கள் மனுவை வாபஸ் பெற மறுத்துவிட்டனா். இதனால், அந்தந்த வாா்டுகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், செல்வாக்கு உள்ள சுயேட்சைகளால் தங்கள் வெற்றி பாதிக்கக் கூடும் என, கலக்கத்தில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT