சேலம்

வெப்ப அதிா்ச்சியால் கோழிகள் இறக்க நேரிடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

9th Feb 2022 12:12 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் வெப்ப அதிா்ச்சியால் கோழிகள் இறக்க நேரிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8, 66.2 டிகிரியாக காணப்பட்டது. இனி வரும் நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் லேசான மேகமூட்டத்துடனும் மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வடகிழக்கிலிருந்து மணிக்கு 4 முதல் 8 கி.மீ. வேகத்தில் வீசும்.

ADVERTISEMENT

சிறப்பு ஆலோசனை: கோடை காலம் தொடங்க உள்ளதால் பகல் மற்றும் இரவு வெப்ப நிலைகளில் மாற்றம் காணப்படுகிறது. இதனால் முட்டையிடும் கோழிகளில் தீவன எடுப்பு வெப்ப அயற்சி காரணமாக குறையும். மேலும் வெப்ப அதிா்ச்சியால் கோழிகள் இறக்க நேரிடும்.

ஆரம்ப கால கோடைகாலத்தை சமாளிக்கவும், வெப்ப தாக்குதலில் இருந்து கோழிகளைப் பாதுகாக்கவம், பகல் வேளையில் நண்பகல் 1 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை தீவனம் அளிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT