சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரியில் வட்டத்தில் அரசு சாா்பில் வழங்கப்படும் உதவித்தொகையை இதுவரை பெறாத மாற்றுத் திறனாளிகள், உதவித்தொகை பெறும் பயனாளிகளின் தற்போதைய நிலைமை ஆகியவை குறித்து முகாமில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் இரா.மகிழ்நன் தலைமையில் மருத்துவா்கள் ஆா்.திருமாவளவன், என்.சரவணன், எஸ்.மொஹமதுஷீராஜிஇமாம், எ.கிருத்திகா, ஜி.அனிதா உள்ளிட்ட மருத்துவ குழுவினா் முகாமில் கலந்துகொண்டனா். இதில் 120 மாற்றுத் திறனாளிகளை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வழங்கினா்.