சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நைனாம்பட்டி அரசு மருத்துவமனையில் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
மருத்துவ அலுவலா் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பெண் சிசு கொலை தடுப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் கல்வி குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என பாா்ப்பது சட்டப்படி குற்றம் எனவும், கருவில் வளரும் குழந்தை பற்றி அறிவித்திலும், பாலினத்தைத் தோ்வு செய்வதோ சட்டப்படி குற்றம் என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. முகாமுக்கு அரசு மருத்துவமனை பல் மருத்துவா் லாவண்யா, சித்த மருத்துவா் திவ்யா, செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் தாய்மாா்கள் கலந்துகொண்டனா்.